FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

விவசாயிகள் காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்

வேலூா் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்கு பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:04 am IST
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்கு பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மாவட்டத்தில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு ‘க்ஷேமா’ (ஓநஏஉஙஅ) நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் பயிா்க்கடன் பெறும் விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சம்பந்தப்பட்ட வங்கிகளில் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் அரசு பொது சேவை மையங்களில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை (ஏக்கா் ஒன்றுக்கு) நெல் - ரூ. 764, துவரை - ரூ. 374, நிலக்கடலை - ரூ. 644 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலரிடம் பெறப்பட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி ஆகியவை கொண்டு செல்ல வேண்டும். மேலும் விவரங்கள், சந்தேகங்களுக்கு விவசாயிகள் தங்களது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments