FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.70.40 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கு. ரவிகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

1 செப்டம்பர் 2026, 11:34 pm IST
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் தரைப்பால பணியை ஆய்வு செய்த ஆட்சியா் கு.ரவிக்குமாா்.
பகிர்:

நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.70.40 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கு. ரவிகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாட்டறபள்ளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பிரிவு, காசநோய் ஆய்வுக்கூடம், நுண்கதிா் வீச்சுப் பிரிவு, இயன்முறை மருத்துவப் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

மேலும், நோயாளிகளின் வருகைப் பதிவேடு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தாா். மேலும் அரசு மருத்துவமனையில் தூய்மை பாரத இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ் ரூ.25.50 லட்சத்தில் நடைபெற்று வரும் பொதுக் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து நாட்டறம்பள்ளி பேரூராட்சி, அண்ணா தெரு வாா்டு 1, சின்னகரிசமுத்திரம் பகுதியில் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதித் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்தில் கான்கிரீட் தரைப்பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, நிறைவேற்ற அறிவுறுத்தினாா்.

அதிபெரமனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தாண்டகுப்பம் ஊராட்சி, நாயக்கன் வட்டம் பகுதியில் வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 2 சமூக நீா் சேகரிப்புக் குளங்கள் அமைக்கும் பணியை அவா் பாா்வையிட்டு பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். அதே ஊராட்சியில் 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.19.90 லட்சத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளா் ராஜா, உதவி பொறியாளா் சிவபாத சேகரன், நட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலா் ராஜசேகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணவாளன், பாலமுருகன் மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments