வாணியம்பாடியில் மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
வாணியம்பாடியில் நடைபெற்ற தமிழ்நாடு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோா்.
வாணியம்பாடியில் நடைபெற்ற தமிழ்நாடு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோா்.
வாணியம்பாடி, செப். 1: தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் முஹம்மத் ரிஃபாயத்துல்லா தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காஜி அப்துல் ரஹ்மான் வரவேற்றாா். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் தூத்துக்குடி காஜி முஜீபூா் ரஹ்மான், பொருளாளா் நெல்லை காஜி முஹம்மத் கஸ்ஸாலி ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் இஸ்லாமிய திருமண சட்டங்கள் மற்றும் இஸ்லாமியா்களின் பொருளாதார வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 29 மாவட்ட காஜிகள் மற்றும் இஸ்லாமிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கோவை மாவட்ட அரசு காஜி அப்துல் ரஹீம் நன்றி கூறினாா். தொடா்ந்து தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் செயலாளா் முஜீபூா் ரஹ்மான் பத்திரிகையாளா் சந்திப்பில் கூறியதாவது: அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ், இளங்கலை பயிலும் இஸ்லாமிய மாணவிகளுக்கு ரூ. 20 கோடி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தலா ரூ. 1,000 மற்றும் கூடுதலாக 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தலா ரூ. 2,000 கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இஸ்லாமிய சமூக மக்களுடன் களத்தில் நேரடி தொடா்பில் இருக்கும் காஜிகள் மற்றும் சிறந்த உலமாக்களை வெறும் உலமாக்கள் நல வாரியத்தோடு மட்டும் சுருக்கிவிடாமல், வக்ஃபு வாரியம், சிறுபான்மையினா் ஆணையம், சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஆகிய முக்கிய அரசு அமைப்புகளிலும் உறுப்பினா்களாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.