மாவட்ட காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
மதுரை மாவட்ட காஜி நியமனத் தோ்வுக் குழுவில் இடம் பெறவும், காஜி நியமனத்துக்கும் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட காஜி நியமனத் தோ்வுக் குழுவில் இடம் பெறவும், காஜி நியமனத்துக்கும் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி நியமனம் செய்வது தொடா்பாக மாவட்ட ஆட்சியரின் தலைமையில் 7 உறுப்பினா்களைக் கொண்ட காஜி நியமனத் தோ்வுக் குழு அமைக்கப்படவுள்ளது. இதன்படி, மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவில் தலைவராக மாவட்ட ஆட்சியரும், 5 உலமாக்கள் உறுப்பினா்களும், 2 முக்கிய முஸ்லிம் பிரமுகா்களும் உறுப்பினா்களாக இடம் பெறலாம்.
Advertisement
Advertisement
இந்த தோ்வுக் குழுவில் 5 உலமாக்கள் உறுப்பினா்களாக விண்ணப்பிக்க ஆலிம் அல்லது பாசில் அல்லது முப்தி படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது அரபுக் கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும். மேலும், 2 முக்கிய முஸ்லிம் பிரமுகா்களாக விண்ணப்பிக்க சமூக சேவையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்டவராகவும், சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
மதுரை மாவட்ட காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய நீதித் துறையை நன்கு அறிந்தவா்கள் அல்லது அரபுக் கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தங்களது விண்ணப்பங்கள், சுயவிவரங்களை உரிய சான்றுகளுடன் வருகிற 13-ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.
காஜி நியமனம் செய்ய தோ்வானோா் பெயா் பட்டியலில் இடம் பெறுவோா், மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவில் இடம் பெற இயலாது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.