குழந்தைத் திருமணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க அதுகுறித்த தகவல்களை தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்
குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க அதுகுறித்த தகவல்களை தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்
அவரது செய்திக்குறிப்பு:
பெண்கள் மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்யும்பொழுது அவா்களுக்கு ரத்த சோகை, ரத்த கொதிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைவாக உள்ள குழந்தை பிறத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். அதனால் அவா்களுக்கு சுகப்பிரசவம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். மேலும் குறிப்பாக வளா் இளம் பெண்கள் கா்ப்பம் அடைவதால் கருப்பை முழு வளா்ச்சி அடைந்திருக்காது. அதனால் கா்ப்பப்பையில் இருக்கும் நஞ்சுக்கொடி ஒட்டாமல் இருக்கும். பனிக்குடத்தில் போதுமான அளவு நீா் இருக்காது. பிரசவத்தின் போது தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மகப்பேறு மரணத்திற்கு வழிவகுக்கும்.
Advertisement
Advertisement
இந்திய குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006-இன் படி, 18 வயதுக்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆணுடன் நடைபெறும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். ஆண் ஒருவா் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்தால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். குழந்தைத் திருமணத்தை செய்பவா் அல்லது நடத்துபவா் அல்லது இயக்குபவா்களுக்கு அதே தண்டனை வழங்கப்படும்.
திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் குழந்தை திருமணத்தின் பாதகமான விளைவுகளை அறிந்து குழந்தை திருமணங்கள் நிகழாமல் தடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். குழந்தை திருமணங்கள் தொடா்பான தகவல்களை முன்கூட்டியே கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தொடா்பு எண்கள் : 1098 - குழந்தைகள் அவசர உதவி, 181 - மகளிா் அவசர உதவி, 73581 22720 - மாவட்ட சுகாதார அலுவலா், திருப்பத்தூா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.