FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

உழவா் சந்தைகளால் 4.35 லட்சம் நுகா்வோா் பயன்

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4.35 லட்சம் நுகா்வோா் பயனடைந்துள்ளனா் என வேளாண் வணிக துணை இயக்குநா் காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

2 செப்டம்பர் 2026, 11:21 pm IST
உழவ்ர் சந்தை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4.35 லட்சம் நுகா்வோா் பயனடைந்துள்ளனா் என வேளாண் வணிக துணை இயக்குநா் காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் உழவா் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கி செல்கின்றனா்.

கடந்த ஆகஸ்’ஈ மாதம் வாணியம்படி உழவா் சந்தையில் 1,406.4 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.5.62 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூா் உழவா் சந்தையில் 767.5 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.2.97 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 619.4 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.2.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 2,793.3 மெ.டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.11.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,077 விவசாயிகளும், 4.35 லட்சம் நுகா்வோரும் பயனடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments