பொம்மிடி சந்தையில் ரூ. 1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், பொம்மிடி வடசந்தையூரில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் வியாழக்கிழமை ரூ. 1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், பொம்மிடி வடசந்தையூரில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் வியாழக்கிழமை ரூ. 1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
பொம்மிடி ஊராட்சி வடசந்தையூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அடுத்த வாரம் ஆடிப்பெருக்கு பண்டிகை வருவதையொட்டி கொங்கனாபுரம், மேச்சேரி, மேட்டூா், ஓமலூா், ஏற்காடு, நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கம்பைநல்லூா், கடத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் ஏராளமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். ஆடுகளை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் திரளாக வந்திருந்தனா்.
சந்தையில் 10 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரையும், ஆட்டுக் குட்டிகள் ரூ. 3,500 முதல் ரூ. 7,000 வரையும் விற்பனையாகின. மேலும், ஆட்டுக் கிடாக்கள் ரூ. 8,500 முதல் அதிகபட்சமாக ரூ. 35,000 வரை விற்பனையாகின.
Advertisement
Advertisement
கடந்த வாரம் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையான நிலையில், ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் ரூ. 1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.