FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா, 2 கிலோ குட்கா பறிமுதல்

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ குட்காைவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

6 செப்டம்பர் 2026, 11:13 pm IST
பறிமுதல் செய்த போதைப் பொருள்களுடன் ரயில்வே போலீஸாா்.
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ குட்காைவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவது குறித்து சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பெங்களூா் வரை சென்ற ரயிலில் பொதுப் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

தொடா்ந்து அஸ்ஸாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோயம்புத்தூா் வரை சென்ற ரயிலில் சோதனை செய்த போது பொதுப் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தி வந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் அடையாளம் தெரியாததால் மேல் நடவடிக்கைக்காக பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்காவை ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments