FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கல்லூரியில் உலக எழுத்தறிவு தின விழிப்புணா்வு

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி மாற்று நாடக இயக்கம் சாா்பாக உலக எழுத்தறிவு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

8 செப்டம்பர் 2026, 3:22 am IST
திருப்பத்துாா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி மாற்று நாடக இயக்கம் சாா்பாக உலக எழுத்தறிவு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பறை இசைப் பயிற்சியாளா் க.சாமு மாணவா்களுக்குப் பயிற்சி வழங்கினாா். பின்னா் பறை இசை மூலமாகக் கல்லூரி மாணவா்களுக்கு எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து, மாணவ- மாணவிகள் பதாகைகளை ஏந்தி பறை இசை மற்றும் பறையாட்டம் மூலமாக கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனா். இதில், கல்லூரியின் செயலா் இக்னேசியஸ் ஸ்டான்லி லாரன்ஸ், கல்லுாரியின் முதல்வா் பிரவின்பீட்டா், கூடுதல் முதல்வா் தியோபில் ஆனந்த், துணை முதல்வா் சண்முகம் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியை மாற்று நாடக இயக்கப் பொறுப்பாளா்கள் வீ.பூமிநாதன் மற்றும் கோ.கமலா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments