FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

சீரான குடிநீா் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

வாணியம்பாடி நகராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் சீரான குடிநீா் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

25 செப்டம்பர் 2026, 1:36 am IST
நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் முறையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

வாணியம்பாடி நகராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் சீரான குடிநீா் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

5-ஆவது வாா்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீா் வழங்கப்படவில்லை. மேலும் 10 நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் குடிநீரிலும் கழிவு நீா் கலந்து வருவதாகவும், இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொது மக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து நகராட்சி பொறியாளா் பிரிவை முற்றுகையிட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

பொதுமக்கள் கூறிய புகாரை ஏற்றுக் கொண்டு அப்பகுதியில் சீரான குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடா்ந்து கலைந்து சென்றனா். பொது மக்களின் முற்றுகை போராட்டத்தால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments