FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாவட்டந்தோறும் நவயோதயா பள்ளிகளை தொடங்க வலியுறுத்தல்

கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி சிறக்கும் வகையில் மாவட்டந்தோறும் நவயோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி சிறக்கும் வகையில் மாவட்டந்தோறும் நவயோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் நிகேதன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய ஆசிரியர் சங்கத்தின், மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் திரிலோகசந்திரன் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில், ஆரம்பக் கல்வியை கட்டாயம் தாய்மொழியிலேயே கற்பிக்க வேண்டும். கிராமப் பகுதி மாணவர்களின் கல்வி சிறக்க மாவட்டந்தோறும் நவயோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும். 
மேலும், 6,7,8 வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்தல், அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்றுநர்களின் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments