FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

யோகா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் வழங்கினார்

மாநில அளவிலான யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை,  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வியாழக்கிழமை வழங்கினார்.  

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

மாநில அளவிலான யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை,  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வியாழக்கிழமை வழங்கினார்.  
 ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல் தனியார் அரங்கத்தில் தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்கமும், சென்னை மாவட்ட யோகா வளர்ச்சி சங்கமும் இணைந்து நடத்திய 10-ஆவது மாநில அளவிலான யோகா போட்டியில்  சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், பல்வேறு வகைகளில் யோகா சேவை புரிந்தவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு யோகா சங்க நிறுவனர் மற்றும் செயலாளர் அன்பரசன் தலைமை  வகித்தார். இதில் யோகா சாதனையாளர் 
அ. அருளீஸ்வரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில்,  தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று சாதனையாளர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். 
    இப்போட்டியில் பங்கேற்ற  அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசு, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.  இதில், ஸ்ரீ மனோ யோகாச்சாரியார், சமூக சேவகர் துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு யோகாசன சங்கத் தலைவர் யோகஜோதி ஜே.ரகு குமார், சென்னை மாவட்ட யோகாசன சங்கத் தலைவர் சுரேஷ் குமார், யோகா ஆசிரியர் ஆர்.தயாளன், எம். தண்டபாணி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments