100 நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணி அருகே, நூறு நாள் வேலை வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி அருகே, நூறு நாள் வேலை வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணியை அடுத்த தாழவேடு ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக நூறு நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி, 100 க்கும் மேற்பட்ட பெண்கள் வியாழக்கிழமை காலை, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்தனர்.
மேலும், திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, 100 நாள் வேலை வழங்கவில்லை, சில நாள்கள் வேலை வழங்கியதற்கும் கூலி தரவில்லை என கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது, 100 நாள் வேலையில் கட்டடப் பணிகள்தான் வழங்கப்படுகிறது என விளக்கியதும் பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.