FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள்: ஜூன் 16 -இல் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 16-இல் தொடங்கி,

Updated On : 8 ஜூன் 2018, 2:48 am IST
பகிர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 16-இல் தொடங்கி, ஜூலை 8-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் அருணா தெரிவித்தார். 
தற்போதைய நிலையில் கிராமங்களில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இல்லாமலேயே பள்ளிப் பருவத்தை மாணவ, மாணவிகள் கடந்து செல்லும் சூழ்நிலையுள்ளது. 
இதில், விளையாட்டு மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், சுறுசுறுப்பை உருவாக்கி, மன இறுக்கத்தையும் களைய முடியும். 
சிறுவர்கள் 12 வயது முதல் 16 வயது அல்லது ஒன்பது மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் பருவம் தான் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கக் கூடிய பருவம் ஆகும். இதைக் கருத்திற்கொண்டு கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஊராட்சிகள் தோறும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதன்படி, ஒவ்வொரு ஊராட்சியிலும், தடகளப் போட்டியான 100, 200, 400 மீட்டர் ஓட்டம், இரும்பு குண்டு எறிதல், வட்டு எறிதல், இருபாலருக்கும் கையுந்து பந்து, கபடி போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான 2 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதற்காக மாநில அளவில் 12,524 ஊராட்சிகளில் போட்டிகளை நடத்த தலா ரூ.20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. 
இப்போட்டிகள் ஜூன் 16-ஆம் தேதி, தொடங்கி, ஜூலை 8 -ஆம் தேதி வரையில் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக நடத்தப்பட இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் போட்டியில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு வழங்குவதற்கான உபகரணங்கள் வந்துள்ளன. 
மேலும், 240 சான்றிதழ்கள், தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 240 பதக்கங்களும், முதலுதவி பெட்டி மற்றும் விளையாட்டு உபகரணங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதை போட்டிகள் நடத்துவதற்கு முன்னதாக ஒவ்வொரு ஊராட்சி செயலர்களிடமும் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments