பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகள் தொடங்கின: மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்வு
திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 சிறப்பு உடனடி துணைத் தேர்வு மையத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் அன்புச்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 சிறப்பு உடனடி துணைத் தேர்வு மையத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் அன்புச்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு உடனடி துணைத் தேர்வு ஜூன் 25 -ஆம் தேதி தொடங்கி ஜூலை 4 -ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இத்தேர்வை எழுத மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலம் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை தமிழ்த் தேர்வுடன் பிளஸ் 2 உடனடித் தேர்வுகள் தொடங்கின. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் அன்புச்செல்வம் ஆய்வு மேற்கொண்டு தேர்வை எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல், கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. அப்போது, பறக்கும் படையைச் சேர்ந்தவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.