காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்றுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்றுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 5-ஆவது நாளான நேற்று இந்தியா 1 தங்கம் உள்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது.
தடகளம், பாரா தடகளம் மற்றும் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது. 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என இந்திய வீரர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
பாரா தடகளத்தில் பெண்களுக்கான F57 பிரிவு குண்டு எறிதல் போட்டியில் ஷர்மிளா தன்கர் பங்கேற்றார். இவர், பாரா தடகளத்தில் இந்தியாவிற்கு முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் சர்வேஷ் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் 53 கிலோ பிரிவில் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 79 கிலோ பிரிவில் வல்லூரி அஜய பாபு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பாரா தடகளத்தில் பெண்களுக்கான F57 பிரிவு குண்டு எறிதல் போட்டியில் ஷில்பா கே. ஷைலா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதில், ஒரே போட்டியில் இருவர் பதக்கம் வென்றுள்ளனர்.
மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் 58 கிலோ பிரிவில் பிந்தியாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த வெற்றிகளின் மூலம் இந்தியா காமன்வெல்த் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 8-ம் இடம்பிடித்துள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா 59 பதக்கங்களுடன் (26 தங்கம், 13 வெள்ளி மற்றும் 20 வெண்கலம்) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
India has won six medals in a single day at the Commonwealth Games.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.