FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை! முக்கிய அறிவிப்பு

அரசுப் பேருந்துகளில் ஸ்பீக்கர் ஒலியுடன் செல்போன் பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்...

Updated On : 28 ஜூலை 2026, 9:47 am IST
அரசுப் பேருந்துகளில் ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை - X
பகிர்:

அரசுப் பேருந்துகளில் ஸ்பீக்கர் ஒலியுடன் செல்போன் பயன்படுத்தக் கூடாது, சக பயணிகளுக்கு இடையூறு செய்யும்வகையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் மக்கள் எந்த நேரத்திலும் மொபைல்போன் பயன்படுத்துவது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. சிக்னலில் நிற்கும்போதுகூட மக்கள் ரீல்ஸ் பார்க்கும் மோசமான நிலை வந்துவிட்டது.

இதில் குறிப்பாக அரசுப் பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும்போது சத்தமான ஒலியுடன் ரீல்ஸ் விடியோக்கள் பார்ப்பது, மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் போனில் சத்தமாக பேசிக்கொண்டு செல்வது என அதிகரித்துவிட்டது.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக பலரும் புகார் தெரிவித்துவந்த நிலையில் போக்குவரத்துத் துறை அதுசார்ந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்தக் கூடாது. செல்போன் ஸ்பீக்கருக்கு பதிலாக இயர்போன் அல்லது ஹெட்போனை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது,

மேலும் அரசுப் பேருந்துகளில் இது தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

summary

Use of mobile phones with loudspeaker mode is prohibited on government buses

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments