கோரிக்கை நிறைவேற்றம்: அமைச்சருடன் கிராம நிர்வாக அலுவலர்கள் சந்திப்பு
வருவாய்த்துறை மானிய கோரிக்கையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிய
வருவாய்த்துறை மானிய கோரிக்கையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் புதன்கிழமை நன்றி தெரிவித்தனர்.
கடந்த சில நாள்கள் முன்பாக, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை, சங்க நிறுவனர் இரா.போசு, மாநிலத் தலைவர் சீனிவாசன், மாநில சட்டப்பிரிவுச் செயலாளர் புகழேந்தி, மாநிலச் செயலாளர் பிரமானந்தஜோதி, மாநிலச் செய்தி தொடர்பாளர் அருள்ராஜ் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை சந்தித்து நேரில் அளித்தனர்.
இந்த தீர்மான நகலில், பணியிட மாறுதல் கோரும் மனுக்களை உடனுக்குடன் ஆய்வு செய்து மாவட்ட மாறுதல் ஆணை பிறப்பித்தல், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கல்வித் தகுதியை 10-ஆம் வகுப்பில் இருந்து பட்டதாரி அளவில் உயர்த்தி துணை வட்டாட்சியர் அளவில் பதவி உயர்வு அளித்தல், கிராம நிர்வாக அலுவலர் பதவியை உருவாக்கிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தேவகோட்டையில் சிலை அமைத்தல் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இதன் அடிப்படையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சட்டப் பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை கிராம நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.