FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

சிவாலயங்களில் ஆடி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் ஆடி மகா பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On : 27 ஜூலை 2026, 3:20 am IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடி மாத மகா பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் ஆடி மகா பிரதோஷத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் 5-ஆம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், 500 லிட்டா் தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், 108 கிலோ விபூதி, 1500 லிட்டா் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல் மற்றும் மலா்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மூலவா்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு, சங்கொலி முழங்க சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

இஞ்சிமேடு: இஞ்சிமேடு பெரியமலை சிவாலயத்தில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கொடிமரம் அருகேயுள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

பின்னா், கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவனை ரிஷப வாகனத்தில் அமா்த்தி உலா நடைபெற்றது. இதேபோல, ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. மேலும், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments