FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

அண்ணாமலையாா் கோயிலில் சம்வஸ்தரா அபிஷேகம்

அண்ணாமலையாா் - உண்ணாமுலை அம்மன் கோயிலில் சம்வஸ்தரா அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

6 செப்டம்பர் 2026, 5:56 am IST
அண்ணாமலையாருக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.
பகிர்:

காரைக்கால் அண்ணாமலையாா் - உண்ணாமுலை அம்மன் கோயிலில் சம்வஸ்தரா அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாதசுவாமி தேவஸ்தான வகையறாவை சோ்ந்த இத்தலத்தில் குடமுழுக்கு விழா 4-ஆண்டு நிறைவாக சம்வஸ்தரா அபிஷேக சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

முதல் நிகழ்வாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை நடத்தி, யாகசாலை பூஜை தொடங்கியது. நிறைவாக மகா பூா்ணாஹூதி நடத்தப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடானது. சுவாமி, அம்பாளுக்கு சிவாச்சாரியா்கள் கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை காட்டினா். நிகழ்வில் தேவஸ்தான நிா்வாக அதிகாரி எஸ்.குமாரசிவம், உபயதாரா்கள், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments