FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கார் மோதியதில் இளைஞர் சாவு: பொதுமக்கள் சாலை மறியல்

 திருவாலங்காடு அருகே சாலையோரம் நின்றிருந்த இளைஞர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்தவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

 திருவாலங்காடு அருகே சாலையோரம் நின்றிருந்த இளைஞர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்தவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாலங்காடு ஒன்றியம், சக்கரமல்லூர் கிராமம் அருகே புதன்கிழமை இரவு, அதே பகுதியைச் சேர்ந்த அசோக் (30) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக காரை ஓட்டி வந்த ராஜேஷ் (28), இருசக்கர வாகனம் மற்றும் அசோக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் படு காயம் அடைந்த அசோக், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த அசோக்கின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், 300-க்கும் மேற்பட்டோர், சின்னம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருவாலங்காடு போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அசோக் மீது முன்விரோதம் காரணமாகத்தான் ராஜேஷ் காரை ஏற்றி கொலை செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போலீஸார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments