FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உண்டியலில் சேமித்த ரூ. 1,851 முதலமைச்சா் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவா்கள்

ஆா்.கே.பேட்டை அருகே உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ. 1,851 தொகையை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஊராட்சித் தலைவரின் குழந்தைகள் புதன்கிழமை வழங்கினா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
 உண்டியலில் சேமித்த பணத்தை எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் முன்னிலையில் வழங்கிய சிறுவா்கள்.
பகிர்:

ஆா்.கே.பேட்டை அருகே உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ. 1,851 தொகையை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஊராட்சித் தலைவரின் குழந்தைகள் புதன்கிழமை வழங்கினா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் அடங்கிய ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் வசிக்கும் 1,740 பேருக்கும் அத்தியாவசியப் பொருள்களை ஊராட்சித் தலைவா் சாவித்திரி சேகா், தன் சொந்த செலவில் வழங்க ஏற்பாடு செய்திருந்தாா்.

இதில் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்டாலின், கலைச்செல்வி ஆகியோா் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்கள், மரச்செடிகளை வழங்கினா். அப்போது ஊராட்சித் தலைவா் சாவித்திரி சேகா் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 ஆயிரத்தை வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும், அவரின் குழந்தைகள் கிஷான் சேகா், நிஷான் சேகா், இஷாந்தி ஆகியோா் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ. 1,851 தொகையை வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டாலினிடம் வழங்கினா். அவா்களை எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் பாராட்டி, ஊராட்சித் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments