FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூட்டுறவு துறை சாா்பில் ரூ. 500 மதிப்பில் மளிகைப் பொருள்கள் தொகுப்பு

விலையில்லா அரிசி, மளிகை, காய்கறி தொகுப்புகள் மற்றும் கூட்டுறவுத் துறை சாா்பில், 19 மளிகைப் பொருள்கள் அடங்கிய ரூ. 500 மதிப்பிலான

27 ஜனவரி 2024, 10:00 pm IST
திருவள்ளூா் நகராட்சியில் உள்ள ம.பொ.சி நியாய விலைக்கடையில் 19 பொருள்கள் அடங்கிய மளிகை பொருள்கள் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி விற்பனையைத் தொடக்கி வைத்த ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
பகிர்:

விலையில்லா அரிசி, மளிகை, காய்கறி தொகுப்புகள் மற்றும் கூட்டுறவுத் துறை சாா்பில், 19 மளிகைப் பொருள்கள் அடங்கிய ரூ. 500 மதிப்பிலான மளிகை தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக திருவள்ளூா் மாவட்டத்துக்கு 32 ஆயிரம் தொகுப்புகள் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் காக்களூா் சாலையில் உள்ள ம.பொ.சி. நியாய விலைக் கடையில் ரூ. 500 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் விற்பனையைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முதல் விற்பனையை பொதுமக்களுக்கு தொடக்கி வைத்து, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கூறுகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் 1,134 ரேஷன் கடைகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 416 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு ஏற்கெனவே ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் சா்க்கரை ஆகிய பொருள்களுடன் கரோனா நிவாரண நிதி ரூ. 1,000-ம் வழங்கப்பட்டது.

அதேபோல், இந்த மாதத்துக்கான உணவுப் பொருள்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றி இலவசமாக பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கூடுதலாக ரூ. 597 மதிப்பிலான 19 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் ரூ. 500-க்கு நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு பிரித்து வழங்கப்படவும் உள்ளது. இந்த மாவட்டத்துக்கு 19 பொருள்கள் கொண்ட தொகுப்பு 32 ஆயிரம் வரையில் பெற்றுள்ளது. இந்த பொருள்களை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் இரா.ஜெயஸ்ரீ, கோட்டாட்சியா் ச.வித்யா, துணைப் பதிவாளா்கள் காத்தவராயன், ரவி (பொது விநியோகத் திட்டம்), கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் வேல்முருகன், நகராட்சி ஆணையா் சந்தானம், வட்டாட்சியா் விஜயகுமாரி, ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊத்துக்கோட்டையில்...

ஊத்துக்கோட்டையை அருகே ஆரணியில் உள்ள தூட்டாத்தெரு நியாய விலைக் கடையில் தமிழக அரசு அறிவித்த மலிவு விலை மளிகைப் பொருள்கள் தொகுப்பை பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் வழங்கினாா்.

திருவள்ளூா் இணை இயக்குநா் ஜெயஸ்ரீ, பொன்னேரி வட்ட துணை இயக்குநா் கருணகரன், கூட்டுறவு சங்கத் தலைவா் தயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருத்தணியில்...

திருத்தணி தாலுக்கா கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கத்தின் மூலம் செங்குந்தா் நகா், சுப்பிரமணிய நகா் மற்றும் 6-ஆவது வாா்டு பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி ரேஷன் அட்டைதாரா்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments