FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்னும் அந்தக் கனவிலேயே இருக்கிறேன்... ரஜினியை விமானத்தில் சந்தித்த கயாடு லோஹர்!

நடிகர் ரஜினிகாந்த்துடன் பயணம் செய்த கயாடு லோஹர்...

நடிகை கயாடு லோஹர் நடிகர் ரஜினிகாந்த்
பகிர்:

நடிகை கயாடு லோஹர் நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்த நிகழ்வைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக கயாடு லோஹர் வளர்ந்து வருகிறார். டிராகன் திரைப்படத்தால் தொடர்ந்து இதயம் முரளி, டொவினோ தமாஸுடன் பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், பள்ளிச்சட்டம்பி பெரிய வெற்றியை பெறவில்லை. இதயம் முரளி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்திலும் நடிகர் சூர்யாவின் 48-வது படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விமானத்தில் நடிகர் ரஜினியுடன் அருகே அமர்ந்து வந்த கயாடு லோஹர், இதுகுறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், “நான் இன்னும் கனவிலேயே இருக்கிறேன். மிகப்பெரிய ரசிகையாக இருந்து எப்படியோ இப்போது ரஜினி சாரின் பக்கத்து இருக்கையில் விமானத்தில் பயணித்ததை இப்போதும் நம்ப முடியவில்லை. அவரைச் சந்தித்த தருணத்தில் எனக்குள் சுந்தரி ஓட, கிட்டத்தட்ட லா லா லேண்டில் இருந்தேன். என்னவொரு எதிர்பாராத தருணம்... என் நாள் ஆசிர்வதிக்கப்பட்டது. ரஜினி சாருடன் இணைந்து ஒருநாள் நடிப்பேன் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Kayadu Lohar has shared details of her meeting with actor Rajinikanth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments