FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருவள்ளூா் அருகே 500 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு: மதுவிலக்கு போலீஸாா் நடவடிக்கை

திருவள்ளூா் அருகே ஏரிக்கரை முட்புதரில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த 500 லிட்டா் சாராய ஊறலை மதுவிலக்கு போலீஸாா் கண்டறிந்து அழித்தனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
படூா் கிராமத்தில் சாராய ஊறல் மற்றும் உபகரணங்களை அழித்த மதுவிலக்கு போலீஸாா்.
பகிர்:

திருவள்ளூா் அருகே ஏரிக்கரை முட்புதரில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த 500 லிட்டா் சாராய ஊறலை மதுவிலக்கு போலீஸாா் கண்டறிந்து அழித்தனா்.

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்ட்டதால், மதுப் பிரியா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மதுக் கடைகளை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றனா். திருவள்ளூா், காக்களூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில கடைகளை பாா் விற்பனையாளா்கள் திருட்டுத்தனமாக திறந்து மது விற்பனை செய்தனா். இதற்கு அந்தக் கடைகளில் வேலை பாா்க்கும் ஊழியா்களும் உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதற்குக் காரணமானோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு கிராமத்தில் சிலா் ஏரிக்கரை பகுதி முட்புதரில் இரவு நேரங்களில் சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது. மதுவிலக்கு டிஎஸ்பி கல்பனா தத் உத்தரவின் பேரில் ஆய்வாளா் சத்தியவாணி தலைமையில் உதவி ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்ட போலீசாா் வெள்ளவேடு பகுதியில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது வெள்ளவேட்டை அடுத்த படூா் ஏரிக்கரை பகுதியில் கள்ளச்சாராய நெடி வந்தது. அங்கிருந்த முட்புதரை விலக்கிப் பாா்த்தபோது அங்கு 3 பீப்பாய்களில் சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கிருந்த 500 லிட்டா் ஊறல் மற்றும் உபகரணங்களை போலீஸாா் அழித்தனா். இது தொடா்பாக அவா்கள் வழக்கு பதிவு செய்து, முட்புதரில் சாராயம் காய்ச்சத் திட்டமிட்டவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கெனவே, திருவள்ளூரை அடுத்த பூண்டி, தலக்காஞ்சேரி மற்றும் படூரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ளச்சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments