மகன் பிறந்திருக்கிறான்.. மகிழ்ச்சியை பகிர்வதற்குள் இல்லாமல் ஆக்கிய மருத்துவமனை தீ விபத்து!
மகன் பிறந்திருக்கிறான்.. மகிழ்ச்சியை பகிர்வதற்குள் இல்லாமல் ஆக்கிய மகாராஷ்டிர அரசு மருத்துவமனை தீ விபத்து
எனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் செல்போனில் அழைத்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த ஸ்வப்னில் பார்கே, சிறிது நேரத்தில், மகாராஷ்டிர அரசு மருத்துவமனை தீ விபத்தில் தன்னுடைய பிறந்து ஒரு நாள் கூட ஆகாத குழந்தையை இழந்திருக்கிறார்.
அமராவதி மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்டபோது, தன்னுடைய மனைவியையும், பிறந்த குழந்தையையும் தேடியபோதுதான், விபத்தில் பலியான மூன்று குழந்தைகளில் தன்னுடைய மகனும் அடங்குவார் என்று தெரிந்து துடித்துப் போனார்.
குறைப்பிரசவத்தில் பிறந்த தன்னுடைய மகனை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருந்த நிலையில் எப்படியாவது அவன் காப்பாற்றப்பட்டிருப்பான் என்றே ஆரம்பத்தில் ஸ்வப்னில் நினைத்திருந்தார். ஆனால், அப்படி நடக்கவில்லை.
Advertisement
Advertisement
என்னுடைய குழந்தையும், மனைவியும் எங்காவது இருப்பார்கள் என்று தேடிக் கொண்டேயிருந்தேன். ஆனால், காலையில்தான், என்னுடைய குழந்தை இறந்துவிட்டதை அறிந்தேன்.
குறைப்பிரசவத்திலும், உடல் எடை குறைவுடனும் குழந்தை பிறந்ததால், பிறந்தவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றிவிட்டனர். என்னுடைய குழந்தையை நான் ஒரு முறைகூட தூக்கிப் பார்க்கவில்லையே என்று கதறுகிறார் ஸ்வப்னில்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (என்ஐசியு) திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் பலியாகின.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகாலை 3.15 மணியளவில் குறை மாதம் அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த குழந்தைகளை சிகிச்சைக்காக வைக்கும் வென்டிலேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த 3 குழந்தைகள் பலியாகின. தீ விபத்தைத் தொடா்ந்து, மருத்துவமனையில் பிறந்த மற்ற 36 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
A son was born... but a hospital fire snatched away the chance to share the joy!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.