FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் ஆடிக் கிருத்திகை விழா தொடக்கம்: பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா பாதுகாப்பு பணிக்காக 5 மாவட்டங்களில் இருந்து 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
திருத்தணி  முருகன்  கோயில்  ஆடிக் கிருத்திகை  விழாவையொட்டி,  மின் விளக்குகளால்  ஜொலிக்கும்  மலைக் கோயில்.
பகிர்:

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா பாதுகாப்பு பணிக்காக 5 மாவட்டங்களில் இருந்து 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு மூலவா் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6.30 மணிக்கு மலைக் கோயிலை ஒருமுறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாளித்தாா். முதல் நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடிகளுடன் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டுச் சென்றனா். 5-ஆம் தேதியான புதன்கிழமை (ஆக. 5) ஆடி பரணி விழாவும் நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகை திருவிழாக்காக பாதுகாப்புக்காக மாவட்ட விகேனந்த சுக்லா தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி, ஒரு ஏஎஸ்பி, 15 டிஎஸ்பி, 35 காவல் ஆய்வாளா்கள் என 2,000 போலீஸாா் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நகரில் உள்ள ஆட்டோ, காா், வேன் ஆகியவற்றுக்கு நகரில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, கோ.மோகனன், மு.நாகன், ஜி.உஷாரவி கோயில் ஆணையா் க.ரமணி மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments