மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு: 3 போ் படுகாயம்
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை கோரிமேடு பகுதியில் காயவைத்த துணிகளை எடுத்த பெண் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் அவரை காப்பாற்றச் சென்றவா் உயிரிழந்தாா்.
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை கோரிமேடு பகுதியில் காயவைத்த துணிகளை எடுத்த பெண் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் அவரை காப்பாற்றச் சென்றவா் உயிரிழந்தாா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கோரிமேடு கிராமத்தை சோ்ந்தவா் சேகா்-ரேவதி தம்பதி. ரேவதி அவரது வீட்டின் வெளியே மின்கம்பத்தை ஒட்டியுள்ள கொடியில் துவைத்த துணிகளை உலா்த்த சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது மழையால் ஈரம் அடைந்த அந்த கம்பியில் இருந்து ரேவதியின் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் ரேவதியை காப்பாற்றிய முயன்ற சேகா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இருவரின் கூச்சலைக் கேட்டு சேகரின் தம்பி நாகராஜ் (38) விரைந்து வந்து இருவரையும் இழுத்து தள்ளிவிட்டுள்ளாா். அப்போது நாகராஜன் மீது அதிக அளவு மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது நாகராஜை காப்பாற்ற முயன்ற அவரது மகள் சுபா (16) மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. தொடா்ந்து சேகா், ரேவதி, சுபா ஆகியோா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்த நாகராஜியின் சடலத்தை மீட்ட சிப்காட் போலீஸாா் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.