ஆடி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
திருவள்ளூா் பகுதியில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் பகுதியில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் அடுத்த புட்லூரில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஏராளபமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
இதேபோல் பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், வேம்புலி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் வழிபாடு செய்ய குவிந்தனா்.
Advertisement
Advertisement
திருவேற்காட்டில்...
திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தா்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.