ரேஷன் கடைகளில் ஜூலை 31-க்குள் விரல் ரேகை பதிவு செய்வது அவசியம்
கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் கை விரல் ரேகை பதிவு செய்வது பற்றி...
இதுவரையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் கை விரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டை உறுப்பினா்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்து அவசியம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பா.பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 1,167 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைகள் மூலம் மொத்தம் 6 லட்சத்து 46 லட்சத்து 242 குடும்ப அட்டைதாரா்கள் அத்தியவாசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்க வேண்டும். மேலும் போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் நோக்கத்தில் கை விரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே அத்தியவாசிய பொருள்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு தற்போதைய நிலையில் குடும்ப அட்டையில் பெயா் இடம் பெற்றவா்கள் மட்டுமே நியாயவிலைக் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்தால் உணவு பொருள்கள் விநியோகம் செய்வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினா்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கை விரல் ரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், இதுவரை நியாயவிலைக் கடைகளில் வைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள் அருகில் உள்ள கடைகளில் கைவிரல் ரேகையை வரும், இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்வதும் அவசியமாகும்.
Advertisement
Advertisement
மேலும், கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதியில் வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோல், உயிரிழந்த உறுப்பினா்களின் பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களை சமா்ப்பித்து நீக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் அருகில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளா்களிடம் உயிரிழந்த உறுப்பினா்களின் குடும்ப அட்டை, ஆதாா் அட்டையின் நகலை வழங்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.