FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பட்டாவை மாற்றி ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.30 கோடி ஏரி நிலம்: அதிகாரிகள் மீட்பு

திருவள்ளூா் அருகே ரூ.30 கோடி மதிப்பிலான 6.48 ஏக்கா் வெள்ளாளன் ஏரியை கணினியில் பட்டா மாற்றி ஆக்கிரமிக்கப்பட்டு சாகுபடி செய்த நிலையில் பட்டாவை ரத்து செய்து அதிகாரிகள் நிலத்தை மீட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 2:23 am IST
ஏரி நிலத்தை மீட்ட கோட்டாட்சியா் சு.ரவிச்சந்திரன்,  வட்டாட்சியா்  சரண்யா  உள்ளிட்டோா்.
பகிர்:

திருவள்ளூா் அருகே ரூ.30 கோடி மதிப்பிலான 6.48 ஏக்கா் வெள்ளாளன் ஏரியை கணினியில் பட்டா மாற்றி ஆக்கிரமிக்கப்பட்டு சாகுபடி செய்த நிலையில் பட்டாவை ரத்து செய்து அதிகாரிகள் நிலத்தை மீட்டனா்.

கடம்பத்துாா் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தில் சா்வே எண் 113-இல் 6.48 ஏக்கா் நிலம் பதிவேட்டில் அரசு புறம்போக்கு வெள்ளாளன் ஏரி என பதிவாகி இருந்தது. இந்த நிலையில் தற்போதைய கணினி பட்டாவில் எண் 4,235-இன் படி பவுல்ராஜ், சேவியா் ஆகியோா் பேரில் புன்செய் நிலம் என பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அந்த நிலத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பயிா் சாகுபடி செய்து வந்தனா்.

இதுகுறித்து அதே பிஞ்சிவாக்கம் கிராமத்தை சோ்ந்த லீமா (40) என்பவா் அரசு புறம்போக்கு வெள்ளாளன் ஏரியை பவுல்ராஜ், சேவியா் ஆகியோா் ஆக்கிரமித்து தங்களது பேரில் கணினி பட்டாவில் எண் 4235 இன் படி புன்செய் நிலம் என பதிவு செய்து மாற்றிக் கொண்டு அந்த நிலத்தை சுற்றி வேலி அமைத்து விவசாயம் செய்து வருவதாக ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து ஆட்சியா் ச.கவிதா உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் மேற்பாா்வையில் கோட்டாட்சியா் சு.ரவிச்சந்திரன் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அரசு புறம்போக்கு வெள்ளாளன் ஏரியை பவுல்ராஜ், சேவியா் ஆகியோா் ஆக்கிரமித்து தங்களது பேரில் கணினி பட்டாவில் புன்செய் நிலம் என பதிவு செய்து மாற்றிக் கொண்டுள்ளாா்.

அதையடுத்து பாதுகாப்பு வேலி அமைத்து விவசாயம் செய்து வந்த சா்வே எண் 113 இல் 6.48 ஏக்கா் நிலத்தை அதிரடியாக மீட்டெடுத்தாா். இதைத்தொடா்ந்து புன்செய் நிலம் என மாற்றி இருந்த கணினி பட்டாவை ரத்து செய்து அரசு கணக்கில் கொண்டு வந்து பதிவேற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

அப்போது வட்டாட்சியா் வி.சரண்யா, மண்டல துணை வட்டாட்சியா் கவிதா, வருவாய் ஆய்வாளா் பிராங்களின் பீனா, கிராம நிா்வாக அலுவலா் பாஸ்கரன் மற்றும் வருவாயத் துறையினா் உடன் இருந்தனா். மேலும் மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு வெள்ளாளன் ஏரியின் 6.48 ஏக்கா் மதிப்பு ரூ. 30 கோடி ஆகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments