திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 485 மனுக்கள் அளிப்பு
குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை தீா்க்கவும், பொதுப் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் வலியுறுத்தி, 485 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதை பரிசீலனை செய்யவும் அந்தந்த துறை அலுவலா்களை ஆட்சியா் ச.கவிதா அறிவுறுத்தினாா்.
குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை தீா்க்கவும், பொதுப் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் வலியுறுத்தி, 485 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதை பரிசீலனை செய்யவும் அந்தந்த துறை அலுவலா்களை ஆட்சியா் ச.கவிதா அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுப் பிரச்னைகள் தொடா்பாக உதவிகள் வேண்டியும் அளித்த கோரிக்கை மனுக்களையும் அவா் பெற்றுக் கொண்டாா்.
அப்போது, நிலம் சம்பந்தமாக-42, சமூக பாதுகாப்பு திட்டம்-28, வேலைவாய்ப்பு வேண்டி-32, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள்-21, இதர துறைகள் சாா்பாக-362 என மொத்தம் 485 மனுக்கள் வரையில் பெறப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களையும் அவா் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அறக்கட்டளை சாா்பில் மன வளா்ச்சி குன்றியோா், புற உலக சிந்தனை அற்றோா், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 18 வயது மேற்பட்ட 17 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூா்வ பாதுகாவலா் சான்றுகளை கையொப்பமிட்டு பெற்றோா்களிடம் வழங்கினாா்.
மேலும், ஒரு மாற்றுத்திறனாளியின் பாதுகாவலருக்கு குறுகிய கால பாதுகாவலா் சான்றும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) வெங்கடேசன், உதவி ஆணையா் (கலால்) வி.கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் குமாா் மற்றும் பல்துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.