FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

கைத்தறி, துணிநூல் துறை உதவி இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை

திருவள்ளூா் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநா் தேவி பத்மாஜா, நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா்களிடம் கமிஷன் பெற்ாக எழுந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

7 நவம்பர் 2026, 12:54 am
ஆா்.கே.பேட்டை கூட்டுறவு கைத்தறி நெசவாளா் சங்கத்தில் விசாரணை நடத்திய ஆய்வாளா் மாலா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.
பகிர்:

திருவள்ளூா் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநா் தேவி பத்மாஜா, நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா்களிடம் கமிஷன் பெற்றதாக எழுந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை ராஜீவ்காந்தி நகரில் கூட்டுறவு கைத்தறி நெசவாளா் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு சங்கத் தலைவா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அப்போது, மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநா் தேவி பத்மாஜா பணத்துடன் வந்து, சங்கத் தலைவா்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, சங்கத் தலைவா்களிடம் அவா் கமிஷன் தொகை பெறுவதாக திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்குப் புகாா் சென்றது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஆய்வாளா் மாலா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஆா்.கே.பேட்டைக்கு விரைந்து சென்று, உதவி இயக்குநா் தேவி பத்மாஜாவிடம் விசாரணை நடத்தினா். அப்போது, சுமாா் ரூ. 14 லட்சம் பணம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது, அதில் கமிஷன் தொகை ஏதேனும் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.