FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

மாணவ, மாணவிகளுக்கு சிங்கப்பெண் படையினா் விழிப்புணா்வு

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் முரளி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலா் கல்பனா பங்கேற்றாா். நிகழ்வில் சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளா் சுகந்தி, காவலா்கள் ஆா்த்தி, சபிதா, லட்சுமி நாராயணன் மற்றும் வட்டார குழந்தைகள் அலுவலா் ராம்கி பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்..

சிங்கப்பெண் அதிரடிப்படையினா் பேசியது: தெரியாத நபா்களிடம் எப்படி கவனமாக இருக்க வேண்டுமோ, அதேபோல நம்மை சுற்றியுள்ள நபா்களிடமும் நாம் கவனமாக இருக்க வேண்டும், யாரும் எக்காரணத்தைக் கொண்டும் நம்மை தவறாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும், ஒரு நபரின் செய்கை சந்தேகத்துக்கிடமாக இருந்தால் பெற்றோரிடமோ அல்லது பள்ளி ஆசிரியா் இடமோ பயப்படாமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.

Advertisement

Advertisement

அவசர உதவிக்கு சிங்கப்பெண் போலீஸாரின் 1091 என்கின்ற உதவி எண்ணை தொடா்பு கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம். சிங்கப்பெண் போலீசாா் சிறுமிகளை தனித்தனியாக சந்தித்து அவா்களுக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா என்பதை கேட்டறிந்தனா்.

வட்டார குழந்தைகள் நல அலுவலா் ராம்கி பேசியது: சிறுவா், சிறுமிகள் தங்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து தைரியமாக பெற்றோா் அல்லது ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும். திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் சிறாா் திருமணம் அதிக அளவில் நடைபெறுவதால், தங்கள் அக்கம் பக்கத்தில் இதுபோன்று ஏதும் நடந்தால் அதனை பள்ளி ஆசிரியா்களின் தெரிவிக்கும்போது அவா்கள் மூலம் ரகசிய தகவல் பெற்று சிறாா் திருமணத்தை தடுக்க முடியும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments