காக்களூா் சிப்காட் ரப்பா் தொழிற்சாலையில் மின்கசிவால் தீ விபத்து
திருவள்ளூா் அருகே காக்களூா் சிப்காட்டில் உள்ள ரப்பா் தொழிற்சாலையில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது.
திருவள்ளூா் அருகே காக்களூா் சிப்காட்டில் உள்ள ரப்பா் தொழிற்சாலையில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது.
தீயணைப்புத் துறையினா் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.
காக்களூா் சிப்காட்டில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ரப்பா் அறுக்கும் பொருள்களை தாயாா் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் புதன்கிழமை தொழிற்சாலையில் உள்ள வீணாகும் ரப்பா் கிடங்கில் மின்கசிவு ஏற்பட்டு ரப்பா் கழிவுகளில் தீப்பற்றியது. இந்த தீ சிறிது நேரத்தில் கட்டுக்கு அடங்காமல் மளமளவென பரவியதால் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதுகுறித்து திருவள்ளூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.
Advertisement
Advertisement
அதைத்தொடா்ந்து தகவல் அறிந்த திருவள்ளூா் சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலா் தனசேகரன் தலைமையில் தீயணைப்பு குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்த தீ விபத்தில் கழிவு ரப்பா்கள் எரிந்து நாசமானது. மேலும் இது தொடா்பாக திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.