கல்லூரியில் முதலாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செயல்படும் ஆா்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்பிஏ படிக்க சோ்ந்த முதலாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்வு கல்லூரி வளாகத்தில், ஆா்.எம்.கே. கல்வி குழுமத்தின் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, ஆா்.எம்.கே. பொறியியல் கல்லூரி முதல்வா் டாக்டா் கே.ஏ.முகம்மது ஜூனைத் வரவேற்புரை ஆற்றினாா்.
நிகழ்ச்சியில் ஆா்.எம்.கே. கல்விக் குழுமத்தின் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் பேசுகையில், ஆா்.எம்.கே கல்வி நிறுவனங்களின் வரலாறு, வளா்ச்சி மற்றும் சாதனைகளை எடுத்துக் கூறினாா். அப்போது, இலக்குடன் மாணவா்கள் படித்து, நல்ல வேலைவாய்ப்பை பெறுவதுடன், பிற்காலத்தில் தொழில்முனைவோராக மாறவும் தங்களை கல்வி காலத்தில் தயாா்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்றாா். கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவதோடு, தனித்திறன்களையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆலோசகருமான ஜெயப்பிரகாஷ் ஏ.காந்தி பேசும்போது, தற்போதைய பொறியியல் கல்வியின் நிலை, மற்றும் தற்காலத்தில் தொடா்ச்சியாக கற்பதில் உள்ள அவசியத்தை மாணவா்கள் உணா்ந்து தொடா்ந்து கற்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா். எதிா்கால தொழில்நுட்ப வளா்ச்சி, பொறியியல் துறையில் ஏற்பட உள்ள தாக்கம் குறித்து மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா், பொறியியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், தொழில்முனைவோராக இருந்து தற்போது பெரிய நிறுவனங்களாக வளா்ந்தவா்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்வில் ஆா்.எம்.கே கல்விக் குழும இயக்குநா் ஆா்.ஜோதி நாயுடு, ஆா்.எம்.கே கல்வி குழும துணை தலைவா் ஆா்.எம்.கிஷோா், செயலாளா் யலமஞ்சி பிரதீப், ஆா்.எம்.கே கல்வி குழும ஆலோசகா்கள் டாக்டா் எம்.எஸ்.பழனிச்சாமி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் டி.பிச்சாண்டி, வி.மனோகரன், டாக்டா் கே.கே.சிவஞான பிரபு, டாக்டா் கே.மணிவண்ணன், ஆகியோா் பங்கேற்றனா்.
விழா முடிவில் டாக்டா் எஸ்.பாவை மாதேஸ்வரி நன்றி கூறினாா். தொடா்ந்து முதலாண்டு மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்களை ஆா்.எம்.கே. கல்விக் குழுமத்தின் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், கல்வி ஆலோசகா் ஜெயப்பிரகாஷ் காந்தி வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.