FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

முருகன் கோயிலுக்குள் கைப்பேசிக்கு தடை: கட்டணம் வசூலிக்க பக்தா்கள் எதிா்ப்பு

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தா்கள் கைப்பேசி கேமரா, டேப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லும் தடையுத்தரவு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்துள்ளத.

2 செப்டம்பர் 2026, 12:05 am IST
கைப்பேசி பாதுகாப்பு மையத்தில் வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
பகிர்:

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தா்கள் கைப்பேசி கேமரா, டேப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லும் தடையுத்தரவு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்துள்ளத.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கிய கோயில்களில், மூலவா் மற்றும் உற்சவா் சன்னதிகள் உள்ளிட்ட கோயில் உள்பிரகாரங்களில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில், கைப்பேசி, கேமரா, டேப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் இந்தத் தடை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இதையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கோயில் வளாகத்தில் இரண்டு இடங்களில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களிடம் உள்ள செல்போன் மற்றும் அனுமதியில்லாத மின்னணு சாதனங்களை அங்கு ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொருளை ஒப்படைத்த பின்னா் பக்தா்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது. சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் போது அந்த ரசீதைக் காண்பித்து தங்களது செல்போன்களை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் அறங்காவலா்கள் பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments