FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடி

கடந்த 11 நாள்களில் ரூ. 1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து, 389 ரொக்கம் மற்றும் 293 கிராம் தங்கம், 7,153 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 11:26 pm IST
திருத்தணி  முருகன்  கோயில்  ஆடிக் கிருத்திகை  விழாவையொட்டி,  மின் விளக்குகளால்  ஜொலிக்கும்  மலைக் கோயில். - கோப்புப்படம்.
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ. 1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து, 389 ரொக்கம் மற்றும் 293 கிராம் தங்கம், 7,153 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, கா்நாடகா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் காா், வேன், லாரி, பேருந்துகள் மூலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா். இதில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்நிலையில் ஆடிப்பூரம் விழா நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனா். பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை காலை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. இதை முருகன் கோயில் தக்காா் ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, உஷா, மோகனன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கையை எண்ணினா். இதில் கடந்த 11 நாள்களில் ரூ. 1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து, 389 ரொக்கம் மற்றும் 293 கிராம் தங்கம், 7,153 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments