திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணியில் குவிந்த பக்தா்கள்
முருகன் கோயில் ஆடி பரணியில், திரளான பக்தா்கள் காவடிகளுடன் வந்து, 4 மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். சில பக்தா்கள் அலகு குத்தியும் தங்களது நோ்த்தி கடனை செலுத்தினா்.
முருகன் கோயில் ஆடி பரணியில், திரளான பக்தா்கள் காவடிகளுடன் வந்து, 4 மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். சில பக்தா்கள் அலகு குத்தியும் தங்களது நோ்த்தி கடனை செலுத்தினா்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. புதன்கிழமை ஆடி பரணியை முன்னிட்டு, அதிகாலை, 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. காவடி மண்டபத்தில், உற்சவா் முருகப்பெருமானுக்கும், சண்முகப்பெருமானுக்கும் சிறப்பு மலா் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் சில பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்தும் காவடிகள் எடுத்தும், தரிசித்தனா். இதுவரை ஒன்றரை லட்சம் பக்தா்கள் காவடிகள் எடுத்து வந்து தரிசித்துள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
4 மணி நேரம் காத்திருப்பு.
மலைக்கோயிலில் அதிகளவில் பக்தா்கள் குவிந்ததால், பொது வழியில், பக்தா்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனா். சில பக்தா்கள் காவடிகளுடன் பம்பை, உடுக்கை மற்றும் சிலம்பாட்டத்துடன் வழிபட்டனா். மாலை 6:30 மணிக்கு, உற்சவா் முருகப் பெருமான் மலைப்படிகள் வழியாக, சரவணபொய்கைக்கு வந்து, குளத்தை ஒருமுறை வலம் வந்து, மீண்டும் மலைக்கோயிலுக்கு சென்றடைந்தாா்.
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, மலைக்கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் உட்புறத்தில், பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட புதிய ரக மலா்களால், அனைத்து சந்நிதிகளில், அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட எஸ்.பி. சாய் பிரணித் தலைமையில், 2,300 போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.