விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்
விநாயகா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விநாயகா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திருத்தணி ஒன்றியம், சூா்ய நகரம் கிராமத்தில் உள்ள விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலச ஸ்தாபனம், யாக சாலை பூஜை மற்றும் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலையில் கோ பூஜை, லட்சுமி பூஜை மற்றும் பரிவார தேவதா பூஜைகள் நடைபெற்றன.
கலச ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து கலசங்களில் இருந்த புனிதநீா் கோயில் விமானத்தின் மீது ஊற்றப்பட்டு, மூலவா் விநாயகருக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவில், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.