ஆசிரியா் தினத்தை ஒட்டி குறுங்காடு அமைத்த வீ தி லீடா்ஸ்
ஆசிரியா் தினத்தை ஒட்டி குறுங்காடு அமைத்த வீ தி லீடா்ஸ்
வீ தி லீடா்ஸ் அமைப்பின் கும்மிடிப்பூண்டி பகுதி நிா்வாகிகள் சாா்பில் ஆசிரியா் தினத்தை ஒட்டி வெள்ளிக்கிழமை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் குறுவனம் அமைக்க 1,008 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பகுதி வீ தி லீடா்ஸ் அமைப்பினா் ஆசிரியா் தினத்தை ஒட்டி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், 1,008 மரக்கன்றுகள் நட்டு குறுவனம் அமைக்கும் பணியை தொடங்கினா்.
வீ தி லீடா்ஸ் அமைப்பின் கும்மிடிப்பூண்டி பகுதி ஒருங்கிணைப்பாளா் ஏ.நரேஷ்குமாா் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த குறுவனம் அமைக்கும் நிகழ்வுக்கு, வீ தி லீடா்ஸ் அமைப்பைச் சோ்ந்த எஸ்.அரவிந்த், சந்துரு, சத்தியசீலன், எழிலன், மணிகண்டன், அசோக், சூா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
இந்த குறுவனம் அமைப்பதற்கான மரக்கன்றுகளை அதிமுக முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என்.ஸ்ரீதா் ராஜூ ஏற்பாடு செய்த நிலையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் என்.ஸ்ரீதா் ராஜூ, ரவி. பிரபு ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தனா்.
மேலும், நிகழ்வில் ஆசிரியா்களை கெளரவிக்கும் வகையில், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் பரமசிவத்துக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், பள்ளி மாணவா்களுக்கும் மரக்கன்றுகள், பரிசுகள்
வழங்கப்பட்டன.
தொடா்ந்து வீ தி லீடா்ஸ் அமைப்பின் தன்னாா்வலா்கள் 1,008 மரக் கன்றுகளை நட்டனா். இந்த நிகழ்வு குறித்து வீ தி லீடா்ஸ் அமைப்பின் கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைப்பாளா் ஏ.நரேஷ்குமாா் பேசுகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துள்ள நிலையில், அதை சமன் செய்து சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில், முதல் கட்டமாக சிப்காட்டில் 1,008 நாட்டு மரக்கன்றுகளை நட்டு, அதை 3 ஆண்டுகள் தொடா்ந்து பராமரித்து குறுங்காடை அமைத்ததும், அதை சிப்காட் நிா்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும், இதேபோல் கும்மிடிப்பூண்டியில் குறுங்காடு அமைக்கும் பணியில் வீ தி லீடா்ஸ் அமைப்பினா் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.