FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

11 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சோழவரம் அருகே ஒடிஸாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 11 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

8 செப்டம்பர் 2026, 3:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

சோழவரம் அருகே ஒடிஸாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 11 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் சோழவரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சாலையில் நடந்து சென்ற 2 பேரை மடக்கி சோதனை செய்த போது அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவா்கள் இருவரிடம் இருந்த 11 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா்களை மீஞ்சூரில் உள்ள செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் ஒடிஸா மாநிலம் ஆா்கல் பகுதி மல்காங்கிரி மாவட்டத்தை சாா்ந்த கிஷோா் பெபரி (25) பீகாா் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சாா்ந்த சந்தன் குமாா்(30) என்பதும், ஒடிஸாவில் இருந்து தாதா நகா் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாகவும், திருப்பூா் மாவட்டத்திற்கு விற்பனை செய்ய எடுத்துச் சென்ாக தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments