FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ரயிலில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா இளைஞா் கைது

31 ஆகஸ்ட் 2026, 3:21 am IST
கைது
பகிர்:

விருதுநகரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒடிசாவைச் சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.

விருதுநகா் ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க ரயில் நிலையத்திலும், அங்கு வரும் ரயில்களிலும் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற ரயிலில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த ஒருவரின் பையைச் சோதனை நடத்தினா். இதில் 9.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த சிக்குபிரதம் (23) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரைக் கைது செய்த ரயில்வே போலீஸாா், பறிமுதல் செய்யப்பட்ட 9.5 கிலோ கஞ்சாவை ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments