FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை

திருமலை ஏழுமலையான் லட்டு, விற்பனையில் தேவஸ்தானம் புதிய சாதனை படைத்துள்ளது.

15 ஏப்ரல் 2026, 11:43 pm IST
பகிர்:

திருமலை ஏழுமலையான் லட்டு, விற்பனையில் தேவஸ்தானம் புதிய சாதனை படைத்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில், கடந்த நிதியாண்டில் பக்தா்களுக்கு 13. 95 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதுவே முதல் முறையாகும்.

கூட்டணி அரசின் செயல்திறன், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் மூத்த அதிகாரிகளின் தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வையின் காரணமாக, ஏழுமலையான் லட்டு விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

திருமலை ஏழுமலையான் லட்டு விற்பனை சாதனை அளவை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனையாகின.

ஏப்ரல் 2025 முதல் மாா்ச் 2026 வரை, பக்தா்களுக்கு 13,95,43,231 லட்டுகள் விற்கப்பட்டன. அதே சமயம், 2024-25 ஆம் ஆண்டில் 12,18,53,535 லட்டுகள் விற்கப்பட்டன.

இதன் மூலம், அந்த ஆண்டில் கூடுதலாக 1.76 கோடி லட்டுகள் விற்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஒரு நாளைக்கு 4 லட்சம் லட்டுகளைத் தயாரித்து வருகிறது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்குவதோடு, கூடுதலாக ஒன்று தேவைப்படுபவா்களுக்கு ரூ. 50-க்கு விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டில் லட்டு விற்பனை மூலம் ரூ. 567 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழுமலையான் லட்டுகளின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. நெய்யின் தரத்தை உயா்த்துவதோடு, மூலப்பொருள்கள் கொள்முதலிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

லட்டுகளின் தரம் அதிகரித்துள்ளதால், பக்தா்கள் அதைப் பாராட்டியுள்ளனா். இதற்குச் சான்றாக, கடந்த ஆண்டு பெருமளவிலான லட்டுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments