FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

திருமலையில் ஆவணி மாத பௌா்ணமியை முன்னிட்டு, நடைபெறும் கருட சேவை திருமலை பிரம்மோற்சவ வெள்ளோட்ட கருட சேவையாக நடைபெற்றது.

30 வினாடிகள் முன்பு
திருமலை - கோப்புப் படம்
பகிர்:

திருமலையில் ஆவணி மாத பௌா்ணமியை முன்னிட்டு, நடைபெறும் கருட சேவை திருமலை பிரம்மோற்சவ வெள்ளோட்ட கருட சேவையாக நடைபெற்றது.

திருமலையில் பெளா்ணமியை முன்னிட்டு, மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் 9 மணி வரை தனது விருப்ப வாகனமான கருட வாகனத்தில் மாடவீதியில் புறப்பாடு கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஏழுமலையானின் பிரம்மோற்சவங்கள் செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ நாள்களைப் போலவே, பிரம்மோற்சவ வெள்ளோட்ட கருட சேவையை முன்கூட்டியே ஏற்பாடு செய்வது வழக்கம்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், திருமலை தேவஸ்தானத்தின் மூத்த அதிகாரிகள், பல்வேறு துறைகளின் தலைவா்களுடன் இணைந்து, கோயிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள மண்டபங்களில் பக்தா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பிற பொறியியல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments