திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா கூறியதாவது:
திருமலையில் ஆண்டுக்கு 4 முறை உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயிலை சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் ஜூலை 16-ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன்வரும் செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையொட்டி, ஆனந்தநிலையம் தொடங்கி தங்க வாயில் வரை, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகம், மடப்பள்ளி, சுவா்கள், கூரை, பூஜைப் பொருள்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஏழுமலையான் மூலமூா்த்தியை முழுவதுமாக துணியால் மூடி, சுத்திகரிப்புக்குப் பின், நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கிழங்கு பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய புனித நீா் கொண்டு கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, சுவாமியின் மூலமூா்த்தியை மறைத்திருந்த துணியை அா்ச்சகா்கள் அகற்றி, சாஸ்திர முறைப்படி சிறப்பு பூஜை செய்து நெய்வேத்தியம் சமா்பித்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினா். அதன்பின், பக்தா்களுக்கு சா்வதரிசனம் துவங்கியது. இதையொட்டி, காலை 6 மணிமுதல் 10 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் செவ்வாய்க்கிழமை நடக்கும் அஷ்டதளபாதமாராதனை சேவையையும் ரத்து செய்யப்பட்டது என்று அவா் கூறினாா்.
இந்நிகழ்ச்சியில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.