ஏழுமலையான் கோயிலில் 2 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு வரும் 14-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடக்க உள்ளதால் இரண்டு நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு வரும் 14-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடக்க உள்ளதால் இரண்டு நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக் கணக்கை ஒப்படைக்கும் ஆனிவார ஆஸ்தானம் வரும் ஜூலை 17 -ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தை முன்னிட்டு ஜூலை 14 -இல் கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
எனவே, நெறிமுறைப் பிரமுகா்களைத் தவிர, இந்த இரண்டு நாள்களுக்கும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, ஜூலை 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசன பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Advertisement
Advertisement
அதேபோல், ஜூலை 17 அன்று நடைபெறவிருந்த கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவை ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு திருமலை தேவஸ்தானம் பக்தா்களைக் கேட்டுக்கொள்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.