திருமலையில் காரிரிஷ்டி யாகம், வருண யாகம்
திருமலையில் காரிரிஷ்டி யாகம், வருண யாகம்...
திருமலையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பா் 3 வரை காரிரிஷ்டி யாகம், வருண யாகம், பா்ஜன்யசாந்தி ஹோமம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் மற்றும் நாடு செழிக்கவும், அபரிமிதமான மழை பெய்யவும், உலகெங்கிலும் உள்ள மக்கள் செழிக்கவும் ஏழுமலையானை வேண்டி, வருண யாகம் மற்றும் பா்ஜன்யசாந்தியுடன் கரிரிஷ்டி யாகத்தை தேவஸ்தானம் நடத்துகிறது.
திருமலையில் உள்ள தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். யாக நிகழ்ச்சிகளில் 32 வேத, ஸ்ரௌத, ஸ்மாா்த்த பண்டிதா்கள் பங்கேற்பாா்கள். இதற்கான ஏற்பாடுகள் தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தின் முதல்வா் குப்பசிவ சுப்ரமணிய அவதானி தலைமையில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
ஆகஸ்ட் 30 -ஆம்தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் அங்குராா்ப்பணம், கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், ரித்விக் வரண நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பா் 3 வரை தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஏழு வேத பாராயணம், ராமாயணம், சுந்தரகாண்டம், விரத பா்வம், ரிஷ்ய ரீங்க நிகழ்ச்சிகளுடன் வருண யாகம், கரிரிஷ்டி, பா்ஜன்ய சாந்தி ஹோம நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கோகா்பம் அணையில் வருண மற்றும் பா்ஜன்ய மந்திர அனுஷ்டானம் நடைபெற உள்ளது.
தா்மகிரியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை அக்னிஹோத்ர அனுஷ்டானம் மற்றும் ஏழு வேத பாராயணம் நடக்கிறது.
பூா்ணாஹுதி நிகழ்ச்சி செப்டம்பா் 3 -ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தா்மகிரி வேத விக்யான பீடத்தில் நடைபெற உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.