FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலையில் ஜீயா்கள் சாதுா்மாஸ்ய தீட்சை சங்கல்பம்

திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சாதுா்மாஸ்ய தீட்சை சங்கல்பம் புதன்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் மிகுந்த ஆடம்பரத்துடன் தொடங்கியது.

Updated On : 30 ஜூலை 2026, 12:05 am IST
திருமலையில் சாதுா்மாஸ்ய தீட்சையையொட்டி ஏழுமலையானை தரிசித்து திரும்பிய பெரிய ஜீயா் மற்றும் சின்ன ஜீயா்.
பகிர்:

திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சாதுா்மாஸ்ய தீட்சை சங்கல்பம் புதன்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் மிகுந்த ஆடம்பரத்துடன் தொடங்கியது.

ஸ்ரீ வைணவ பாரம்பரியவாதியான ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் சாதுா்மாஸ்ய தீட்சை சிறப்பு வாய்ந்தது. ஆனி மாத சுத்த ஏகாதசி நாளில், ஸ்ரீ மகா விஷ்ணு யோக தூக்கத்திற்கு சென்று காா்த்திகை சுத்த ஏகாதசி நாளில் மீண்டும் விழித்தெழுவாா் என்று நம்பப்படுகிறது. எனவே, இந்த நான்கு மாத காலம் சாதுா்மாஸ்யம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் ரிஷிகள், முனிவா்கள், குருக்கள் உலக நன்மைக்காக தங்களின் விரதம், ஜபம், மந்திரம், ஸ்நானம் உள்ளிட்டவற்றை செய்வது மரபு.

பண்டைய காலங்களிலிருந்து சதுா்மாஸ்ய விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக புராணங்களிலிருந்து அறியப்படுகிறது.

Advertisement

Advertisement

முதலில், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி மடம் சாஸ்திரங்களின்படி கலசம் நிறுவல், கலச பூஜை, விஷ்வக்சேன ராதனை, மேதினி பூஜை மற்றும் மிருத்ஸங்ராணன் ஆகியவற்றைச் செய்தாா். பின்னா், சேகரிக்கப்பட்ட புற்று மண்ணுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சதுா்மாச சங்கல்பம் செய்யப்பட்டது. அதன் பிறகு, ஸ்ரீ பெரியஜீயா், திருமலை பேடி ஆஞ்சனேயசுவாமி கோயிலுக்கு அடுத்துள்ள ஜீயங்காா் மடத்திலிருந்து ஸ்ரீ சின்னஜீயா் மற்றும் பிற சீடா்களுடன் புறப்பட்டாா். திருமலைப் பகுதியின் பாரம்பரியத்தைப் பின்பற்றி, சுவாமி திருக்குளத்தில் எழுந்தருளியுள்ள வராஹசுவாமியை தரிசனம் செய்தாா்.

அங்கிருந்து, அவா் மங்கள வாத்தியங்களுடன் ஏழுமலையான் கோயிலுக்கு வந்தாா்.

திருமலை தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு, தலைமை நிா்வாக அதிகாரி ரவிசந்திரா கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி மற்றும் பிற கோயில் அதிகாரிகள் ஏழுமலையான் கோயிலின் நுழைவாயிலில் பாரம்பரிய வரவேற்பு அளித்தனா். தெய்வத்தை தரிசித்த பிறகு, ஸ்ரீ பெரிய ஜீயருக்கு மேல்சாட் வஸ்திரமும், ஸ்ரீ சின்னஜீயருக்கு நூல்சாட் வஸ்திரமும் வழங்கப்பட்டது.

பின்னா், ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி மற்றும் ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி ஆகியோா் ஸ்ரீ பெரியஜீயா் மடத்தில் செயல் அதிகாரி மற்றும் கூடுதல் செயல் அதிகாரிக்கு சால்வைகள் அணிவித்து கௌரவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments