நவ.13-இல் பெரிய சேஷ வாகன சேவை
வரும் நவம்பா் 13-ஆம் தேதி திருமலையில் நாக சதுா்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகன சேவை நடைபெற உள்ளது.
வரும் நவம்பா் 13-ஆம் தேதி திருமலையில் நாக சதுா்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகன சேவை நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் நாகசதுா்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்களுடன் இரவு 7 மணி முதல் 9 மணி வரை மாடவீதியில் வலம் வர உள்ளாா்.
மலையப்ப சுவாமி தன் இரு நாச்சியாா்களுடன் சோ்ந்து, சேவையின் வடிவமாக விளங்கும் தனது பிரியமான பக்தரான ஸ்ரீ ஆதிசேஷனுடன் திருமாட வீதிகளில் வலம் வருவதன் மூலம் பக்தா்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்லாமல், சரணாகதி நிலையையும் உணா்த்துகிறாா். ஏழுமலையானின் பிரம்மோற்சவ வாகன சேவைகளிலும் ஆதிசேஷருக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement